ஹரியாணாவில் சர்ச்சைக்குரிய சாமியார் ராம்பாலைக் கைது செய்யும் நடவடிக்கைக்காக, அரசு ரூ. 26 கோடி செலவு செய்திருக்கிறது என்ற செய்தி அதிர்ச்சிதந்தது.
சட்ட விரோதமாக ராம்பால் சேர்த்துள்ள கோடிக் கணக்கான சொத்துக்களைப் பறிமுதல்செய்து அதை அரசுக் கருவூலத்தில் சேர்த்து மக்கள் நலத் திட்டங்களுக்குச் செலவிட வேண்டும். மேலும், ராம்பால் கைது சம்பவத்தின்போது ஒரு குழந்தையும் ஐந்து பெண்களும் இறந்துள்ளார்கள்.
இதற்கு யார் பொறுப்பு? இந்த நேரத்தில் செய்ய வேண்டியது இதுதான்: நாடு முழுவதும் உள்ள ஆசிரமங்களைக் கண்காணிப்பதுடன் இதுபோன்ற சம்பவங்கள் இனி நிகழா வண்ணம் அரசு தடுக்க வேண்டும்.
- வி.டி.ராம்குமார்,ராமநாதபுரம்.