காவிரி ஆற்றில் கர்நாடக அரசு அணை கட்டுவதைத் தடுக்கக் கோரி, தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருப்பது தவறு என்கிறார் கர்நாடக முதலமைச்சர் சித்தராமய்யா. காவிரி நதிநீர்த் தீர்ப்பாயம் சம்பந்தப்பட்ட வழக்கில் ‘ஒரு நதி பல மாநிலங்களுக்கிடையே பாயுமானால், அது இந்த மாநிலத்தில்தான் அமைந்துள்ளது என்று கூற முடியாது; எந்த ஒரு மாநிலமும் அந்த நதி தனக்கு மட்டுமே பாத்தியப்பட்டதாக உரிமை கோர முடியாது; அந்த நதிநீர் தொடர்பாக ஒரு மாநிலம் எந்தச் சட்டமும் இயற்ற முடியாது’ என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது. இதை கர்நாடக முதல்வர் கவனத்தில் கொள்ள வேண்டும்.
- பொ. நடராசன்.நீதிபதி (பணி நிறைவு) மதுரை.