இப்படிக்கு இவர்கள்

மந்திரக் காளான், மருந்துதான்

செய்திப்பிரிவு

மந்திரக் காளான்கள் குறித்த கட்டுரை பயனுள்ள தகவல்களைக் கொண்டிருந்தது. ஒருவகைக் காளான்களிலிருந்து தயாரிக்கப்படும் ஸைலஸைபின், குடிநோயாளிகளுக்கும் எண்ண சுழற்சி மனநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் நல்ல மருந்து.

ஒரு சிலர் தவறாகப் பயன்படுத்துகிறார்கள் என்பதற்காக அதைத் தடைசெய்வது சரியல்ல. சில மருந்துகள் மேலை நாட்டினருக்கு ஒத்துப்போவதில்லை. அதைப் பின்பற்றி அந்த மருந்துகளைத் தடைசெய்வது ஏற்றுக்கொள்ள முடியாதது. நரம்பியல் மேதை பி.ராமமூர்த்தி இதுபோன்ற நடவடிக்கைகளைக் கண்டித்திருக்கிறார்.

- டாக்டர் ஜி. ராஜாமோகன்,சென்னை.

SCROLL FOR NEXT