ஒரு கோடி ரூபாய் ஊதியத்தில் கிடைத்த வேலையை ஏற்க மறுத்த ஐஐடி மாணவர்கள்பற்றிய செய்தி ஆச்சரியம் தந்தது.
குறைந்த காலத்தில் அதிகமாகச் சம்பாதிக்க வேண்டும் என்று நினைக்காமல், தங்களுக்கு அந்த வேலை தொழில்ரீதியான மனநிறைவைத் தராது எனக் கூறி மறுத்தது வரவேற்க வேண்டிய விஷயம். இன்றைய இளைஞர்கள் தங்களது எதிர்காலம் குறித்த உறுதியான முடிவை எடுப்பதும் நல்ல மாற்றம்தான். நிச்சயம் அந்த மாணவர்கள் எதிர்காலத்தில் உயர்ந்த பொறுப்புக்கு வருவார்கள்.
- பி. கார்மேகப் பாண்டி,‘தி இந்து’ இணையதளத்தில்…