இப்படிக்கு இவர்கள்

பொறுப்பு யாரிடம்?

செய்திப்பிரிவு

சமீப காலங்களில் வகுப்பறைகளிலேயே மாணவர்கள் கொல்லப்பட்ட செய்திகள் வேதனை தருகின்றன.

வாழ்வியல் நெறிகளையும் சமூக நிகழ்வுகளையும் விவாதித்து நல்ல கருத்துக்களை மாணவர் மனங்களில் விதைத்தால்தான் கல்வி முழுமை பெறும்.

மதிப்பெண்களுக்குப் பின்னால் மாணவர்களை ஓடவைக்கும் கற்றல் முறையில், நன்னெறிகளை எடுத்துச் சொல்ல ஆசியர்களுக்கு எங்கே நேரம் இருக்கிறது? கற்றல் இடைநிற்றலைத் தடுக்கும் பொறுப்பு ஆசிரியர்களுக்கு மட்டுமல்ல, அரசிடமும் பெற்றோரிடமும் உள்ளது.

- கா. சதீஷ் வேலன்,திண்டுக்கல்.

SCROLL FOR NEXT