இப்படிக்கு இவர்கள்

வாசிப்பின் முக்கியத்துவம்

செய்திப்பிரிவு

‘கலிவரின் பயணங்கள்’ பற்றிய கட்டுரையில், வாசிப்புப் பழக்கம் பற்றி எஸ். ராமகிருஷ்ணன் கூறியிருப்பது சிந்திக்க வைக்கிறது. ‘இன்றைய சிறுவர்கள் ஏன் தமிழ்க் கதைகள், நாவல்கள் வாசிப்பதில்லை’ என்று அவர் கேட்டிருக்கிறார்.

உண்மையில், வாசிப்புப் பழக்கம் தற்போது இளைய தலைமுறையினரிடம் குறைந்துவருகிறது. பொது நூலகங்களில் பள்ளி, கல்லூரி மாணவர்களைக் காண்பது அரிதாக உள்ளது.

கல்லூரி நூலகங்களில்கூடப் பாட சம்பந்தப்பட்ட நூல்களை மட்டும் தேடி வாசிக்கிறார்கள். மூத்தவர்கள்தான் புத்தகங்களின் அருமையை இளைய தலைமுறையினருக்கு எடுத்துச்சொல்லி அவர்களுக்கு வழிகாட்ட வேண்டும்.

- ஜீவன்.பி.கே.கும்பகோணம்.

SCROLL FOR NEXT