இப்படிக்கு இவர்கள்

குழந்தைமையைக் காப்போம்

செய்திப்பிரிவு

‘கொலையாளிகளாகும் குழந்தைகள்’ கட்டுரை நுட்பமான விஷயங்களை எடுத்துரைத்திருக்கிறது.

குழந்தைகளின் குணம் மாறக் காரணம் என்ன? குழந்தைகளுக்குக்கூட நுகர்வுக் கலாச்சாரத்தைக் கற்றுத்தந்தது யார்? முன்பெல்லாம் தாத்தா, பாட்டி அரவணைப்பில் குழந்தைகள் வளர்வார்கள்.

அவர்கள் குழந்தைகளுக்கு நீதிக்கதைகள் சொல்வார்கள். இப்போது குடும்பங்களே தனித்தனித் தீவுகளாகிவிட்ட நிலை. ‘வீடியோ கேம்ஸ்’ சமூகத்தில், வெளியில் சென்று விளையாட நேரம் ஏது? குழந்தைகளை நல்வழிப்படுத்தும் பொறுப்பு நம் அனைவரிடமும் இருக்கிறது.

- இரா.மீ. தீத்தாரப்பன்,ராஜபாளையம்.

SCROLL FOR NEXT