‘இயந்திரமயமாகும் மனிதம்’ - கட்டுரையல்ல, ஒரு மென்கவிதை. மயிலிறகு போன்ற வார்த்தைகளால் இதயத்தை வருடுவது போன்ற வார்த்தைத் தூறல்கள்.
கனிவு சொட்டும் எந்த ஒரு சொல்லும்கூட அறச் செயலாகும் எனத் தொடங்கி, நம் இயந்திர வாழ்க்கை எந்த அளவு துருப்பிடித்திருக்கிறது எனப் புரியவைக்கிறார் கட்டுரையாசிரியர். வாழ்வை இனிமையாக்குவது நல்ல உறவுகளே. மின்னியல் சாதனங்களுடன் கொள்ளும் உறவு முடிவில் வெறுமையைக் காட்டும் பிம்பங்களே.
எந்த விதமான உத்தரவாதமும் இல்லாத வாழ்கையை வாழ்ந்துகொண்டிருக்கும் நமக்கு, நாம் சந்திக்கும் ஒவ்வொரு ஆளும் முக்கியம், உறவும் முக்கியம் எனத் தெளிவுபடுத்தியிருக்கிறார். பலரது அடிமனங்களில் புதைந்துபோயிருந்த ஏக்கங்களை வெளிக்கொணர்ந்ததில் முழுமையான வெற்றி பெற்றிருக்கிறார் சாளை பஷீர். இக்கட்டுரை அனைவருக்கும் ஏற்றதொரு கையேடு.
- ஜே. லூர்து,மதுரை