வணிகப் படங்களில் ரஜினி தொடர்ந்து நடித்தாலும், ‘வயதுக்குரிய’ கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசை அவருக்குள் இருக்கிறது போலும். அதனால்தான் ‘ஜிகர்தண்டா' படத்தின் ரவுடி கதாபாத்திரம் தனக்கு மிகவும் பிடித்தது என்று இயக்குநர் கார்த்திக் சுப்புராஜிடம் கூறியிருக்கிறார்.
அவரைச் சரியாகப் பயன்படுத்த வேண்டிய பொறுப்பு, புதிய இயக்குநர்களிடம் இருப்பது உண்மைதான். ஆனால், ரஜினியும் அவரது ரசிகர்களும் அதற்கு மனதளவில் தயாராக வேண்டும்.
- பாலகுமார்,மேட்டூர்.