இந்தச் சமூகம் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளையும் அவர்களது பெற்றோர்களையும் ஏளனச் சொற்களால் எரிக்கிறது. அர்த்தமற்ற அந்த வசைகளுக்குச் செவிசாய்க்காமல், தங்களைவிட தங்கள் குழந்தைகளுக்கு யாரால் சிறப்பாகக் கல்வி அளிக்க முடியும் என்ற தன்னம்பிக்கையில் ‘ஷைன்’ பள்ளியை மூன்று பெண்கள் நடத்துவது மிகச் சிறப்பான செயல்.
- மு. மகேந்திர பாபு,மதுரை.