இப்படிக்கு இவர்கள்

விவசாயிகளின் பரிதாப நிலை

செய்திப்பிரிவு

மகாராஷ்டிர மாநிலம், விதர்பா பகுதியில் கடந்த 50 நாட்களில் 42 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டார்கள் என்ற செய்தி வேதனை தந்தது.

ஏற்கெனவே, மின்தட்டுப்பாடு, உர விலை உயர்வு, விவசாயப் பொருட்களுக்குப் போதிய விலையின்மை போன்றவற்றால் இந்திய வேளாண்மை தொழில் நலிந்துவருகிறது.

இந்நிலையில், கடன்சுமை தாங்காமல் விவசாயிகள் தற்கொலையால் விவசாயத் துறையை விட்டே விலகிவிடுவார்கள். எனவே, மத்திய, மாநில அரசுகள் விவசாயிகளின் துயரங்களைக் களையவும், விவசாயத் தொழிலைப் பாதுகாக்கவும் தனியாக நிதிநிலை அறிக்கை உருவாக்க வேண்டும். அதுதான் இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வாக அமையும்.

- எம். ஆர். லட்சுமிநாராயணன்,கள்ளக்குறிச்சி.

SCROLL FOR NEXT