இந்தி படிப்பதன் அவசியம் - அவசியமின்மை, மண்ணெண்ணெய் மானிய ரத்து, ராஜபக்சவுக்கு எதிர்ப்பு போன்ற தமிழகம் சார்ந்த பல்வேறு பிரச்சினைகளுக்கு விரல் விட்டு எண்ணிவிடக்கூடிய தலைவர்களின் கருத்துகளே பொதுவாக எல்லாப் பத்திரிகைகளிலும் பதிவுசெய்யப்படுகின்றன.
ஆனால், பொதுமக்களின் எண்ணங்களுக்கு அத்தனை முக்கியத்துவம் தரப்படுவதில்லை. எனவே வாரம் ஒரு பிரச்சினையை பற்றிய விவாதக்களம் என்று முக்கியப் பிரச்சினைகள் குறித்த வாசகர்களின் கருத்துகளையும் தொகுத்து வெளியிட்டால், சமூகத்தில் நல்ல மாற்றங்களை நிகழ்த்தலாம்.
- முகமது ரிஸ்வான்,மின்னஞ்சல் வழியாக…