இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவின் நேர்காணல் அவரைப் போலவே எளிமையாகவும் ஆழமாகவும் இருந்தது. மனிதநேயம் மிக்க தலைவர் அவர். கம்யூனிஸ்ட்டுகள் வெற்றிபெறத் தவறவில்லை என்பதுடன் லெனின், காந்தி, அம்பேத்கர், பெரியார் ஆகியோரிடமிருந்து தேவையானதை எடுத்துக்கொள்வதாகக் கூறியிருப்பது அவரது ஆழ்ந்த பார்வையைக் காட்டுகிறது. இந்த நேர்காணல், அவரது பொதுவுடமை வாழ்வைப் புரிந்துகொள்ள வாய்ப்பாக இருந்தது.
- பொன். குமார்,சேலம்.
***
தரமான கட்டுரைகள்
எந்த ஒரு தலைவரின் பிறந்த நாள் மற்றும் நினைவு நாளாக இருந்தாலும் உரிய இடம் ஒதுக்கி, தரமான கட்டுரைகளை வெளியிட்டு, அவர்களை நினைவுகொள்ள வைக்கும் ‘தி இந்து’ நாளிதழை மனமார வாழ்த்துகிறேன். கட்டுரைகள் சிறு வயதினருக்கும் புரியும் வகையில் இருப்பது நிச்சயம் பாராட்டுக்குரியது.
- அ. அப்துல் ரஹீம்,காரைக்குடி.