இப்படிக்கு இவர்கள்

ஏன் இந்த மாற்றம்?

செய்திப்பிரிவு

ரகசியமாக, 18 மாதங்களாக நடந்துவந்த அமெரிக்கா மற்றும் கியூபாவுக்கு இடையேயான பேச்சுவார்த்தை 50 ஆண்டுகளாக நீடித்து வந்த உரசல்களுக்கும் சச்சரவுகளுக்கும் ஒரு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. ஆனால், இது எதற்கான தொடக்கம் என்பது வரும் நாட்களில் தெரியவரும். பொருளாதாரத்தைக் காப்பாற்றிக்கொள்ள கியூபா எடுத்த முடிவு இது என்று வர்ணிக்கப்பட்டாலும், அமெரிக்காவுக்கே உரித்தான அரசியல் தந்திரம் இதில் பொதிந்து கிடப்பதையும் தெளிவாக உணர முடிகிறது. கியூபாவின் உள்நாட்டுப் பொருளாதாரத்திலும், அரசின் நடைமுறைப் பணிகளிலும் இது ஏற்படுத்தப்போகும் மாற்றம் கியூபாவை எங்கே இட்டுச் செல்லப்போகிறது என்ற கவலையும் எழாமல் இல்லை.

- முனைவர் சீ. ஜானகிராமன்,கும்பகோணம்.

SCROLL FOR NEXT