பள்ளிக் கட்டணம் செலுத்தாத காரணத்தால் உத்தரப் பிரதேசத்தில் 7 வயது மாணவன் ஆசிரியரால் அடித்துக்கொல்லப்பட்ட செய்தி பதைபதைக்க வைத்தது.
ஆசிரியர்கள் சின்னச் சின்னக் காரணங்களுக்காகக் கடும் தண்டனையை மாணவர்களுக்குத் தருகிறார்கள். பள்ளிக் கட்டணம் கட்டாத மாணவனை அடிக்க ஆசிரியருக்கு என்ன உரிமை இருக்கிறது? இந்தப் பாதகச் செயலைச் செய்துவிட்டு அதை மூடி மறைக்க அந்தப் பள்ளி நிர்வாகமும் முயன்றிருக்கிறது. சம்பவத்துக்குக் காரணமான அந்த ஆசிரியர் மீதும் பள்ளி நிர்வாகம் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
- கணேஷ் குமார்,மின்னஞ்சல் வழியாக…