இப்படிக்கு இவர்கள்

முன்னோடிக் கவிஞன்

செய்திப்பிரிவு

எல்லோரும் ஒரே உயிர் என்று எண்ணியதால்தான் பாரதியால் ‘காக்கைக் குருவி எங்கள் சாதி’ என்று பாட முடிந்தது. தன்னைப் பற்றிக் கவலைப்படும் நேரத்தில், தமிழைப் படித்துவந்தால் சந்தோஷமுறுவதாகத் தன் மனைவிக்கு எழுதிய கடிதத்தின் மூலம் தமிழ் மீது அவர் எவ்வளவு பற்றுக்கொண்டிருந்தார் என்பதை உணர முடிகிறது.

இன்றும் நம் மக்கள் நாள், நட்சத்திரம், சகுனம் என மூடப் பழக்க வழக்கங்களில் மூழ்கிக் கிடப்பதைச் சாடியிருக்கிறார். தன் காலத்திலிருந்து எத்தனை தொலைவு அவர் முன்னகர்ந்து இயங்கியிருக்கிறார் என்று வியப்பாக இருக்கிறது.

- மு.மகேந்திர பாபு,மதுரை.

‘பாரதி: பிரபஞ்சத்தின் பாடகன்’ என்ற கட்டுரையில் கவித்துவம் நிரம்பி வழிந்தது. பல மொழிகளைக் கற்ற பாரதிக்குத் தமிழில் உள்ளனவும் தெரியும், தமிழுக்குத் தேவையானவை பற்றியும் தெரியும். இன்றிருக்கும் தமிழ் மலர்ச்சிக்கு வித்திட்டவர் பாரதியே. அது மட்டுமல்ல, பண்டிதர்களுக்கு மட்டுமே உரிமையாய் இருந்த தமிழை, அனைத்துத் தரப்பு மக்களிடமும் கொண்டுசேர்த்ததில் பெரும்பங்கு பாரதியைச் சேரும்.

- கி. நாவுக்கரசன்,ராணிப்பேட்டை.

SCROLL FOR NEXT