சென்னையில் கத்தியைக் காட்டிப் பெண்ணிடம் நகையைப் பறித்த சம்பவம், நகரில் பெண்களுக்கு எவ்வளவு பாதுகாப்பு இருக்கிறது என்பதை உணர்த்துகிறது.
அந்தச் சம்பவத்தை ஒருவர் வீடியோ எடுத்துள்ளதால், குற்றவாளிக்கு எதிரான வலுவான ஆதாரமும் கிடைத்திருக்கிறது.
சென்னையில் நடைபெறும் பல்வேறு குற்றங்கள் தொடர்பான விசாரணையில், தனியார் இடங்களில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்கள் பெரியளவில் காவல்துறைக்குப் பயன்பட்டிருக்கின்றன.
தெரு விளக்குக் கம்பங்களில் கண்காணிப்பு கேமராக்களைப் பொருத்தினால், கொலை, கொள்ளை, வாகனத் திருட்டு போன்றவற்றைத் தடுக்க முடியும்.
- ஜேவி,சென்னை.