இப்படிக்கு இவர்கள்

பாலச்சந்தரின் தாக்கம்

செய்திப்பிரிவு

முன்பெல்லாம், தமிழ் சினிமா ரசிகர்கள் நடிகர்கள் நடிகைகளை மட்டுமே திரையில் பார்த்ததுண்டு. முதன் முதலில், இயக்குருக்கும் ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கிய பெருமை பாலச்சந்தரையே சேரும்.

தற்போது உள்ள இயக்குநர்கள் மற்றும் நடிகர் நடிகைகளில் பாலச்சந்தரின் தாக்கம் இருக்காமல் இருக்காது. என்னுடைய சிறு வயதில் என் தந்தை அவரின் திரைப்படத்துக்கு அழைத்துச் செல்வார்.

திரைப்படம் தொடங்கும்போது டைட்டிலில் இறுதியாக கே.பியின் பெயர் வரும்போது திரையரங்கமே அமைதியாக இருக்கும். எந்த ஒரு பிண்ணனி இசையும் சேர்க்காமல் அவருடைய பெயர் போட்டு அந்த வயதில் பார்த்தது அப்படியே மனதில் பதிந்துவிட்டது.

தனக்கென விளம்பரம் தேவையில்லை என எண்ணி, தன் பெயர் வரும்போதுகூட ஆரவாரம் இல்லாமல் வரச் செய்திருப்பார். அந்த முறையை அவர் கடைசியாக எடுத்த ‘பொய்’ என்ற படம் வரை கடைப்பிடித்திருந்தார்.

- பாரத் ஜ.,தஞ்சாவூர்.

SCROLL FOR NEXT