இப்படிக்கு இவர்கள்

‘மயக்கும் எண்கள்’

செய்திப்பிரிவு

‘வெற்றிக்கொடி’ இணைப்பில் ‘மயக்கும் எண்கள்’ என்ற தலைப்பில் எனது கட்டுரை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் அடுக்குக் குறியீடுகள் சரிவரக் குறிக்கப்படவில்லை. இதனால், வாசகர்களுக்கு இதைப் புரிந்துகொள்வது சிரமமாக இருக்கும். அடுக்குக் குறி இடுவதில் சிரமம் இருந்தால், அடுக்குக் குறியீட்டை ^ என்ற குறியீட்டால் குறிக்கலாம்.

எடுத்துக்காட்டாக, 4624 = 4^4 + 4^6 + 4^2 + 4^4 என்று அச்சிடலாம். ^ என்ற குறி அடுக்கைக் குறிக்கும். 4624 = 4^4 +4^6 + 4^2 + 4^4 = 256 + 4096 + 16 + 256 = 4624 என்பது இதற்கான விடை.

- ச.சீ. இராஜகோபாலன்,சென்னை.

SCROLL FOR NEXT