கிராமஃபோன் பகுதியில் வெளியான ‘வேப்பமுத்து புளியமுத்தே…’ கட்டுரை பலரையும் பால்யத்துக்கு அழைத்துச் சென்றிருக்கும். கட்டுரையாளர் கே.கே. மகேஷ் தன் பால்ய நினைவுகளை நெல்லை வட்டார மொழியில் பதிவுசெய்த விதம் அருமை. விடுமுறை நாட்களில் நண்பர்களுடன் சுற்றியலைந்து பழங்களைச் சேகரித்துச் சுவைத்த நாட்களை அதே சுவையுடன் எழுதியிருக்கிறார்.
முன்னோக்கிய பாதையில் வேகமாகச் செல்லும் வாழ்க்கை ஓட்டத்தைச் சற்று நிறுத்தி, பின்னோக்கி அழைத்துச் சென்று அசைபோட வைக்கும் கிராமஃபோன் பகுதிக்கு நன்றி.
- மு. மகேந்திர பாபு,மதுரை.