குழந்தைகள் பெற்றோர் அரவணைப்பில் வளர வேண்டும். சிறு வயதிலிருந்தே அடுத்தவரை நேசிக்கக் குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டும். தன்னிடம் இருக்கும் பொருளை மற்றவர்களுக்குக் கொடுக்கும் அன்பைச் சொல்லிக்கொடுத்து, அவர்களும் நம்மைப் போன்ற மனிதர்கள்தான் என்று உணர்த்த வேண்டும்.
ஆசிரியர்களும் சற்றே மனம் கனிந்து ஒவ்வொரு குழந்தையையும் தனியாகக் கவனிக்க வேண்டும். அன்பையும் மனிதாபிமானத்தையும் குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுத்தால், விபரீத எண்ணங்கள் அவர்கள் மனதில் தலைதூக்குவதைத் தவிர்க்கலாம்.
- பாலகுமார்,மின்னஞ்சல் வழியாக…