நாட்டின் வளர்ச்சி மற்றும் நல்லாட்சியில் கவனம் செலுத்த வேண்டும் என்று பிரதமர் மோடி கூறுகிறார். நாட்டின் பல இடங்களில் மதமாற்ற நிகழ்ச்சிகள் நடந்துவருவது தொடர்பாக எதிர்க்கட்சிகள் எழுப்பும் கேள்விகளுக்கு பிரதமர் மோடியோ பிற அமைச்சர்களோ பொறுப்புள்ள பதில்களை அளிக்க மறுக்கிறார்கள்.
ஆனால், எதிர்க் கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு மக்களவை நடைமுறைகளுக்கு இடையூறு விளைவித்தபோதும் நாடாளுமன்றத்தை வெற்றிகரமாக நடத்திச் சென்றதாக மோடி அரசு பெருமை பேசுகிறது. இது எந்த வகையில் சரியானது?
- எம். சரவணன்,மின்னஞ்சல் வழியாக…