ஒரு மொழியைக் கற்றுக்கொள்வ தென்பது தனிமனித முயற்சியாலும் ஆர்வத்தாலும் மட்டுமே சாத்தியமாகும். திணிப்பாலோ கட்டளையாலோ அதிகாரத்தாலோ அதனைச் சாதிக்க இயலாது எனும் எளிய உண்மையை யார் எடுத்துச் சொல்வது?
வழக்கழிந்துபோன சம்ஸ்கிருதத்தை எத்தகைய சட்டத்தாலும் பரவலாக்க முடியாது. காலங்காலமாய்த் தமிழையும் ஆங்கிலத்தையும் உபயோகித்துக்கொண்டிருக்கும் நமது மாநிலத்தில் ஆங்கிலம் புரியாமல், தமிழ் தெரியாமல் ஒரு தலைமுறை மெல்ல மெல்ல உருவாகிக்கொண்டிருப்பது யாவரும் அறிந்ததே. இச்சூழலில் சம்ஸ்கிருதமயமாக்கல் என்பது ஒரு மொழியின் மீது துவேஷத்தை உருவாக்குவதற்கே பயன்படும். ‘நீரளவே நீராம்பல்’ என்பதுபோல் பயன்பாட்டின் அளவே மொழியின் வளர்ச்சியும் வீழ்ச்சியும்.
- பி. சந்தானகிருஷ்ணன்,தஞ்சாவூர்.