பிரதமரின் குடும்ப உறுப்பினர் அனைவர்க்கும் 24 மணி நேரப் பாதுகாப்பு வழங்குவது இந்திரா காந்தி காலத்தில் தொடங்கப்பெற்றது.
அது மறுபரிசீலனைக்கு உரியது. ஒவ்வொரு இந்தியக் குடிமகனுக்கும் பாதுகாப்பாக வாழும் உரிமை இருக்கின்றது. அதனை உறுதி செய்யாது சிலருக்கு மட்டும் மிதமிஞ்சிய பாதுகாப்பு அளிப்பது மக்கள் பணத்தை விரயமாக்குவதே. மோடி தனது மனைவியை ஏற்கவில்லை. இருவரும் தனித்தே வாழ்கிறார்கள். சமீபகாலம் வரை யசோதா பென் யாரென்றே தெரியாது.
மனைவி என்று ஏற்றுக்கொண்டால் தனது இல்லத்துக்கு மோடி அழைக்க வேண்டியதுதானே. இன்று அழைத்தாலும் நான் செல்வேன் என்று அவர் சொல்லிய பிறகும் மோடி எந்த எதிர்வினையும் எடுக்கவில்லை. இந்துத்துவா தத்துவத்தின்படி மோடி மனைவியோடு இணைந்து வாழ வேண்டுமல்லவா?
- ச.சீ. இராஜகோபாலன்,சென்னை.