இப்படிக்கு இவர்கள்

பெண்கள் நலன்

செய்திப்பிரிவு

‘நலம் வாழ’ இணைப்பில், உடல்நலம், மனநலம் காப்பது தொடர்பான பயனுள்ள கட்டுரைகள் வெளியாகின்றன. பெண்கள் எதிர்கொள்ளும் முக்கியமான பிரச்சினை மாதவிடாய் தொடர்பான பிரச்சனைதான். அதனை மாற்று மருத்துவம் மூலம் எப்படி தீர்க்கலாம் என்று சொன்னது பாராட்டுக்குரியது. ஆயுர்வேத முறையில் எளிதாக இந்தப் பிரச்சினையை எளிதாக எதிர்நோக்கலாம் என்று விளக்கிய கட்டுரை பயனுள்ள ஒன்று.

- உஷா முத்துராமன்,திருநகர்.

‘வெற்றிக்கொடி’ இலவச இணைப்பில் வெளியான ‘குரல் கேட்கிறதா’ எனும் கட்டுரை அருமையான பதிவு. நமது உள்ளுணர்வு சொல்லும் வார்த்தைகள்தான் நமது ‘மனசாட்சி’ என்றே வைத்துக்கொள்ளலாம். மனிதன் அந்த மனசாட்சியை விற்றுவிட்டதால்தான் இன்றைக்கு சமூகத்தில் பெருகிவரும் குற்றங்களே சாட்சிகளாய் நிற்கின்றன. கட்டுரையின் கடைசியில் சொல்லப்பட்ட ‘உங்களுக்குள்ளே கேட்கும் குரலைவிடப் பெரிய நீதிமன்றம் இந்த உலகத்தில் இல்லை’ என்ற வரி செறிவானது. இதன் பொருளை உணர்ந்து இன்றைய தலைமுறை செயல்பட்டாலே குற்றங்கள் குறையும் என்று நம்பலாம்.

- ம. மீனாட்சிசுந்தரம்,சென்னை.

SCROLL FOR NEXT