கர்நாடகத்தில் மின்துறை அமைச்சர் ஊழல் செய்ததாகச் செய்தி வெளியிட்ட தனியார் தொலைக்காட்சி சேனல், திடீரென்று நிறுத்தப்பட்டது என்ற செய்தி அதிர்ச்சி தந்தது. சம்பந்தப்பட்ட அமைச்சரே அந்த மாநிலத்தின் டி.வி. ஆபரேட்டர்களைத் தொடர்புகொண்டு, இந்த சேனலை முடக்கச் சொன்னார் என்ற தகவல், இன்னும் அதிர்ச்சி தருகிறது. ஜனநாயகத்தில் ஊடகங்களின் பங்கு எத்தனை முக்கியத்துவம் மிக்கது என்று மக்கள் அறிவார்கள். அவர்கள் இதையெல்லாம் கவனித்துக்கொண்டுதான் இருப்பார்கள். கன்னடர்கள் நலனுக்காக குறிப்பிட்ட அந்த சேனல் எதையும் செய்யவில்லை என்பதால், அந்த சேனல் முடக்கப்பட்டதாக கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் சங்கத் தலைவர் கூறியிருப்பது மேலும் சந்தேகத்தை எழுப்புகிறது.
- தஞ்சை பிரவீண்,மின்னஞ்சல் வழியாக…