என். சொக்கன் எழுதிய ‘பகிர்ந்து கொள்ளுதல் எனும் பொறுப்பு' என்ற கட்டுரை, செய்திகளைப் பரப்புவதில் ஊடகங்களுக்கும் பொதுமக்களுக்கும் உள்ள பொறுப்பை வலியுறுத்தும் ஒரு முன்மாதிரி. இப்போது செய்திகளை முந்தித் தருவதில் பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் ஆகியவற்றைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற வலைத்தளங்கள் முதலிடத்துக்கு வந்துவிட்டன.
ஆனால், பத்திரிகைகள், செய்தி ஊடகங்கள் தங்களுக்கு வரும் செய்திகளைத் தங்களின் நிருபர்கள் மூலம் உறுதி செய்த பிறகுதான் அவற்றை மக்களிடம் கொண்டுசெல்லும். ஆனால், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்கள் மூலம் ஊர்ஜிதமாகாத செய்திகள் நொடிப்பொழுதில் நண்பர்கள் மூலம் பகிரப்பட்டு உலகம் முழுவதும் பரவிவிடுகிறது. அதனால், நேரடியாகப் பார்க்காத, உறுதிசெய்யப்படாத தகவலைத் தயவுசெய்து நண்பர்களுடன் பகிராதீர்கள்!
- கே.பி.எச். முகம்மது முஸ்தபா,திருநெல்வேலி