ஒரு இனத்தை அழிக்க அதன் கலாச்சாரத்தை அழிக்க வேண்டும். அதன் கலாச்சாரத்தை அழிக்க மொழியை அழிக்க வேண்டும் என்கிற கோட்பாட்டுடன் மத்திய அரசு செயல்படுவதாகத் தெரிகிறது.
பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவில் மொழியின் மீதான தாக்குதல் கலாச்சார சீரழிவுக்கே இட்டுச்செல்லும். சென்னை, ஹைதராபாத், பெங்களூரு என தென்னிந்தியாவுக்குப் பிழைப்பு தேடிவரும் வடநாட்டவர்களிடம் ஒரு திராவிட மொழியைக் கற்றுக்கொள்ளச் சொன்னால் அர்த்தம் இருக்கும். வழக்கொழிந்துபோன சமஸ்கிருதத்தைத் தூக்கிப்பிடிப்பது இந்துத்துவாவின் கொள்கையைத் திணிக்கும் முயற்சியே.
- சே. செல்வராஜ்,தஞ்சாவூர்.