முதலமைச்சர்களுக்கு நேரு எழுதிய சில கடிதங்களின் தொகுப்பை அறிமுகப்படுத்தியுள்ளது காலத்தின் தேவை. வளர்ச்சி, சீர்திருத்தம் என்ற சொற்கள் எதிர்மறைப் பொருளைக் கொண்டுள்ள நிலையில், அவற்றைப் பற்றிய நேருவின் விளக்கங்கள் தேவைப்படுகின்றன.
ஐந்தாண்டுத் திட்டங்களின் நோக்கங்கள், செயல்படுத்தல் பற்றி நேரு முதல்வர்களுக்குத் தெளிவான விளக்கம் கொடுத்ததுடன் அவர்களை ஊக்குவித்தும் உள்ளார். முதல் பிரதமராக அவர் இருந்ததால்தான் அவர் உருவாக்கிய பொதுத் துறை நிறுவனங்களை இன்றைக்கு விற்றுக் காசு பண்ண ஆட்சியாளர்களால் முடிகிறது. நாட்டுப் பிரச்சினைகள் தவிர, வெளியுறவுக் கொள்கை, அணிசேரா நாடுகள் கூட்டமைப்பு போன்றவற்றைப் பற்றியும் முதல்வர்களுக்கு நேரு எடுத்துரைத்துள்ளார். அவர்களுக்குச் சம்பந்தமில்லை என்று கருதவில்லை. ஒரு ஒப்பற்ற தேசாபிமானியின் செயல்பாட்டினைப் புரிந்துகொள்ள விமர்சனங்கள் உதவும்.
- ச.சீ. இராஜகோபாலன்,சென்னை.