‘குழந்தைகளுக்கு விளையாட நேரம் இருக்கிறதா? என்று கேட்டிருப்பதன் மூலம், பெற்றோரின் நியாயமான மனக்குமுறலையும் அதே குமுறலைக் கொண்ட ஆசிரியர்களின் நிலையையும் திறம்பட வெளிக்கொணர்ந்திருக்கிறார் கர்மீன் சத்தா முன்ஷி.
முதலில் இக்காலக் குழந்தைகளுக்குச் சிரிப்பதற்காவது நேரம் இருக்கிறதா? அதுவே சந்தேகம்தான். குழந்தைகள் இயல்பிலேயே துறுதுறுப்பானவர்கள். அவர்களைக் காலையிலிருந்து மாலை வரை ஒரே இடத்தில் அமரவைத்து அந்தப் பக்கம் இந்தப் பக்கம் திரும்ப விடாமல், ஒரே நேர்க்கோட்டில் பார்க்க வைத்து, கல்வி என்ற பெயரில் எதையாவது எழுத வைத்து அல்லது எதையாவது ஒப்பிக்க வைத்து எழுதுவதற்கும் ஒப்பிப்பதற்கும்தானா குழந்தைகள்? அதற்குத்தானா குழந்தைப் பருவம்? ஓடியாடி விளையாட வேண்டும் என்ற விருப்பம், எல்லாவற்றுக்கும் மேலாக நினைத்த நேரத்தில் தண்ணீர் குடிக்கவும், கழிப்பறை போகவுமான சாதாரண அடிப்படை உரிமைகூட அவர்களிடமிருந்து பறிக்கப்படுகின்ற கொடுமைதானா கல்வி? அந்தக் கொடுமையைச் செய்யும் இடம்தானா பள்ளிக்கூடம்?
- ஜே. லூர்து,மதுரை.