இப்படிக்கு இவர்கள்

கிடைக்குமா சுதந்திரம்?

செய்திப்பிரிவு

சி.பி.ஐ. செய்த தவறுகளைத் தெள்ளத் தெளிவாகச் சுட்டிக்காட்டி உள்ளது தலையங்கம். சி.பி.ஐ. என்றைக்கு அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிலிருந்து சுயமாகச் செயல்படத் தொடங்குகிறதோ அன்றுதான் இந்த அமைப்புக்கு விமோசனம் பிறக்கும். நிலக்கரி ஊழல் தொடர்பாக மன்மோகன் சிங்கை சி.பி.ஐ. ஏன் விசாரிக்கவில்லை என்று சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

அரசின் கை பொம்மையாகச் செயல்பட்ட இந்த அமைப்பு, இனியேனும் சுதந்திரமாகச் செயல்பட வேண்டும். இல்லையென்றால், விசாரணை அமைப்புகள் மீது மக்களுக்கு இருக்கும் நம்பிக்கை நொறுங்கிவிடும்.

- இரவி ராமானுஜம்,திருக்குறுங்குடி.

SCROLL FOR NEXT