‘கழுத்தறுப்பதா கடவுளின் மார்க்கம்?’ என்கிற சிராஜுல் ஹஸனின் கட்டுரை கண்டேன். இறைவன் இஸ்லாத்தை ‘சாந்தி மார்க்கம்’ என்றே அறிமுகம் செய்கிறான். நபிகளார் தனது வாழ்க்கையில் கட்டாய அவசியம் வந்தபோதுதான் வேறு வழியின்றி போர்முனைக்குச் சென்றார். பொறுமையையும் மன்னிப்பின் அவசியத்தையும் தனது வாழ்வின் நெறியாகக் கொண்டு வாழ்ந்தவர் நபிகளார். அவருடைய மார்க்கத்தைப் பின்பற்றுகிற எந்த ஒரு உண்மையான இஸ்லாமியரும் ஐ.எஸ்ஸின் இழி செயலை அங்கீகரிக்க மாட்டார்.
- கே எஸ் முகமத் ஷூஐப்,காயல்பட்டினம்.