ஆனந்த் கிருஷ்ணாவின் ‘சுதந்திரமாக வாழ்வது எப்படி?' - கட்டுரை, இன்றைய தலையாய பிரச்சினையான உறவுச் சிக்கல்களின் முடிச்சுகளை அவிழ்த்துச் சீராக்க உதவும் வகையில் அமைந்திருக்கிறது.
நாம் எப்போதும் மற்றவர்களைத் திருப்திப்படுத்த முயன்றுகொண்டே இருக்கிறோம். ஆனால், என்ன செய்தாலும் மற்றவர்களைத் திருப்திப்படுத்த முடிவதில்லை. பிறரைத் திருப்திப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் நாம் நம் சிந்தனைகளை, செயல்களை வேறு வேறு உருவில் மாற்ற முயன்று, முடிவில் நம் உருவம் எது என்று நமக்கே தெரியாமல்போகிறது. இப்படி மாறியும் பயனில்லாமல், விரக்தி, வெறுமை, சுயபச்சாதாபம் ஏற்படுகிறது. இதுவே நாம் நாமாகவே சுயசிந்தனையுடன் வாழத் தொடங்கினால், மூச்சுமுட்டும் அந்த வாழ்க்கையிலிருந்து விடுபட்டு இயல்பான சந்தோஷத்துடன் சுதந்திரக் காற்றை இனிமையாகச் சுவாசிக்க முடியுமல்லவா?!
- ஜே. லூர்து,மதுரை.