இப்படிக்கு இவர்கள்

இலக்கிய வேதனை

செய்திப்பிரிவு

எழுத்துக்குச் சாதி அடையாளம் தேவையில்லைதான். நல்ல எழுத்தாளர் தன் எழுத்தை நம்புவாரே தவிர, சாதியை அல்ல. வீரமா முனிவர் தேம்பாவணியையும் உமறுப் புலவர் சீறாப் புராணத்தையும் எழுதும்போது தத்தம் சமய அடையாளங்கள் கருதி எழுதியிருப்பார்கள் என்பதைவிட, தமிழுக்கான தங்கள் சேவை என்று கருதியே செய்திருக்க வேண்டும். ஆனால், அனைத்தையும் சமய அடையாளங்களோடு முன்னிறுத்தும் போக்கு வளரத் தலைப்பட்ட காலம் தொட்டு, அவை சமய இலக்கியங்களாகவே முன்வைக்கப்பட்டன. இவ்வளவு ஏன்..? முற்போக்குச் சிந்தனையாளர்கள் என்று தங்களை மார்தட்டிக்கொள்ளும் சில பிற்போக்குச் சிந்தனையாளர்களே தங்களைச் சமயங்களின் பெயரால் முன்னிலைப்படுத்திக்கொள்ள முயலும்போது, தலித் நண்பர்கள் தங்களை அவ்வாறு அடையாளப்படுத்திக்கொள்ள முயல்வதைச் சரி இல்லை என்பதை விட, தவறில்லை என்றே கொள்ளலாம்.

- அத்தாவுல்லா, நாகர்கோவில்.

SCROLL FOR NEXT