இப்படிக்கு இவர்கள்

பாட்டியின் வீடு

செய்திப்பிரிவு

‘ஈரம் காயாத கிணற்றடிகள்’ படித்தபோது என் பாட்டியின் வீடு, அதன் முன் அமைந்த ஊரில் அனைவருக்கும் கோடையிலும் குடிநீர் கொடுத்து பெருமையைத் தேடிக்கொண்ட கிணறு, இரவு பகல் என்று ஓயாமல் கேட்கும் அந்த இரும்பு உருளையின் இனிய ஓசை, அந்த பயோரியா பல்பொடி வாசனை, நடுத்தர வயதுப் பெண்கள், வளரிளம் பெண்கள், பொடியன்கள் என கலகலப்பான பொழுதுகள்... மனம் அந்த நாளைய அழகிய என் பாட்டியின் வீட்டைச் சுற்றியே வருகிறது. பால் கணக்கை பார் கோடுகளாய்க் கரித் துண்டுகளில் எழுதிய அந்தப் பாட்டிகளின் முகத்தில் விழுந்த சுருக்கங்கள் ஒவ்வொன்றும் ஓராயிரம் அனுபவங்களை ஒளித்துவைத்திருந்தன.

- ச. பாலகிருட்டிணன்,குனியமுத்தூர்.

SCROLL FOR NEXT