‘சம்ஸ்கிருதமா? சம்ஸ்கிருதமயமாக்கலா?’ எனும் தலைப்பிலான தலையங்கம் நிறைவாக அமைந்திருக்கிறது. தந்தை பெரியார் இதைப் படித்தவுடன் கட்டிலில் சம்மணம் போட்டு இருந்தாலும் இறங்கிவந்து ‘தி இந்து’வுக்கு ஒரு சபாஷ் போட்டிருப்பார், பேரறிஞர் அண்ணா ‘விடுதலை’ தலையங்கம் தீட்டியதைப் படித்தவுடன் ஏணிப்படி ஏறி மாடியில் அலுவலகத்தில் இருந்த அண்ணாவைப் பாராட்டியது போல!
தலையங்க நாலு பத்தியிலும் தெறித்துச் சிதறி மிளிரும் முத்துக்களாம் கருத்துச் செறிவுள்ள பேழை.
‘இங்கே எந்த வட இந்தியர் தென்னிந்திய மொழி ஒன்றைத் தேர்ந்தெடுக்கப்போகிறார்; தமிழ்நாட்டில் வேண்டுமானால், தாய்மொழியில் படிக்காமலேயே தனியார் பள்ளி மாணவரும் பட்டம் பெறமுடியும்; சம்ஸ்கிருதம் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவருக்குத் தாய்மொழி?’ போன்ற வரிகள், சரியான சாட்டையடி!
- ஆ. மோசஸ் சுந்தரம்,மதிமுக தீர்மானக் குழுச் செயலாளர், தாயகம், சென்னை.