புத்தகங்களில் உள்ள பாடங்களை மட்டும் மனப்பாடம் செய்து, அதன்மூலம் பெறும் வெறும் மதிப்பெண்களின் மேல் உள்ள மதிப்பை, நம்பிக்கையை தான் பெற்ற பிள்ளைகள் மேல் வைக்காத பெற்றோரை என்னவென்று சொல்வது?
படிப்பில் மட்டும் ஜொலிக்கும் மாணவர்களைவிட, பிற கலைகளிலும் ஆர்வம் காட்டும் மாணவர்கள் சமூகத்தில் பெரிதும் மதிக்கப்படுபவர்களாக மாறுகிறார்கள் என்பதை ஏன் பெற்றோர் புரிந்துகொள்ள மறுக்கிறார்கள்? வெறும் மதிப்பெண்கள் மட்டுமே வாழ்க்கையை மேம்படுத்த முடியாது. நல்ல சிந்தனைகளும், நல்ல செயல்களும், கற்கும் கல்வியில் சுதந்திரமும் மட்டுமே இன்றைய மாணவர்களுக்கு அவசியம் தேவை. அதற்கு உறுதுணையாக பெற்றோர் இருந்தால், சிறந்த பிரதிநிதிகளை நம் நாடு பெறும் என்பதில் சந்தேகமில்லை.
- சுபா தியாகராஜன்,சேலம்.