இப்படிக்கு இவர்கள்

குடியைக் கொன்றழிக்கும் குடி

செய்திப்பிரிவு

‘மெல்லத் தமிழன் இனி..!’ தொடரின் ஒவ்வொரு அத்தியாயத்தையும் படிக்கும்போது பதைபதைப்பாக இருக்கிறது. பால் கொடுத்து வளர்த்த பிள்ளைக்கு கொடுக்க வேண்டிய பரிதாபமான நிலைக்கு பெற்றோர்கள் தள்ளப்படுகிறார்கள். சில மாதங்களுக்கு முன் வெளியான ஒரு செய்தியில், ‘சென்னை மாநகரப் பேருந்து ஓட்டுநர்களுக்கு நடந்த மருத்துவ முகாமில், 40% பேரின் ரத்தம் எதற்கும் உபயோகப்படாத அளவுக்கு ஆல்கஹால் கலந்துள்ளது' என்ற செய்தி வெளியானது அதிர்ச்சியளித்தது. இவ்வளவுக்குப் பிறகும் என்ன செய்யப்போகிறது அரசு!

- கி. ரெங்கராஜன்,சென்னை.

காதல் தோல்வியென்றால் கையில் மதுக் கோப்பை, முகத்தில் தாடி என்ற தமிழ் சினிமாக்களின் பாத்திரப் படைப்பு எவ்வளவு அபத்தம் என்பதை ‘மெல்லத் தமிழன் இனி..!’ தொடரைப் படித்தபோது புரிந்தது. காதல் தோல்விக்காக வருந்தி மதுப்பழக்கத்துக்கு அடிமையாகிறவர்கள், தமது பெற்றோர், சகோதர, சகோதரிகளின் மனதை எந்த அளவுக்கு வருத்துகிறோம் என்று உணர்ந்துகொள்ள வேண்டும். மனச்சுமையைப் போக்கிக்கொள்ள எத்தனையோ வழிகள் இருக்கும்போது மதுவை நாடுவது சரியா?

- ச. கிறிஸ்து ஞான வள்ளுவன்,வேம்பார்.

SCROLL FOR NEXT