‘சாபமாக்கிவிட வேண்டாம் மழை தந்த பரிசை’ தலையங்கம் தமிழக அரசின் நீர் மேலாண்மையைப் பற்றி நன்கு தோலுரித்துக்காட்டியது. ஒவ்வொரு பருவ மழையின் போதும் இதைப் பற்றி எவ்வளவு பேசினாலும் எந்த அரசும் கண்டுகொள்வதில்லை. நீங்கள் சொன்னதுபோல் பாவனை அரசியலும் பாவனை அரசாங்கமும்தான் நடக்கிறது. பாதிக்கப்படுவது என்னவோ மக்கள்தான். கடந்த காலங்களில் இருந்து பாடம் கற்றுக்கொள்ளாத எந்த அரசும் மக்கள் மனதில் இடம் பெறாது.
- பொன். முத்தையா,தூத்துக்குடி.