அமெரிக்காவில் மைக்கேல் பிரவுன் எனும் கருப்பின இளைஞர் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில், அவரைச் சுட்டுக் கொன்ற போலீஸ் அதிகாரி விசாரிக்கப்பட வேண்டியதில்லை என்று மிசோரி நீதிமன்றம் கூறியிருப்பது அதிர்ச்சிதருகிறது.
அந்நாட்டின் வளர்ச்சிக்கு ரத்தம் சிந்தி உழைத்த ஆப்பிரிக்க - அமெரிக்கர்களுக்கு அந்த மண்ணில் தங்களுக்கு நீதி கிடைக்காதோ என்ற அச்சம் உருவாகியிருக்கிறது. இந்தத் தீர்ப்பின் எதிரொலியாக நடந்த வன்முறைச் சம்பவங்களும் ஏற்கத்தக்கவை அல்ல. எனினும், நீதிமன்றம் நியாயமாக நடந்துகொண்டிருந்தால் இந்த அசம்பாவிதத்தைத் தவிர்த்திருக்கலாம். கருப்பின மக்களுக்கான நீதி மறுக்கப்படுவது, அந்நாட்டில் கருப்பின மக்கள் இரண்டாம்தர மக்களாக நடத்தப்படுவதை உறுதிசெய்கிறது.
- முனைவர் சீ. ஜானகிராமன்,கும்பகோணம்.