நாங்கள் தமிழகத்தின் சிறிய கிராமங்களில் உள்ள அரசுப் பள்ளிகளில் பணியாற்றிக்கொண்டிருக்கும் ஆசிரியர்கள். நாங்கள் வகுப்பறையில் நடத்துகின்ற பாடப்பொருளுக்கான கற்றல், கற்பித்தலுக்கு உதவியாக ‘தி இந்து’வில் வரும் பல்வேறு செய்திகளையும் கட்டுரைகளையும் பயன்படுத்துகிறோம்.
எட்டாம் வகுப்பு ஆங்கிலத்தில் ‘அவர் விங்க்டு ஃப்ரெண்ட்ஸ்’ (Our Winged Friends) என்ற பாடத்துக்குத் தேவையான பல்வேறு துணைக் கருத்துக்களாக ‘தி இந்து’வில் வெளிவந்த பறவை மனிதர் சலீம் அலியின் வாழ்க்கை வரலாற்றுக் குறிப்புகள், ‘உயிர் மூச்சு’, ‘மாயாபஜார்’ ஆகியவற்றில் வெளிவந்த சலீம் அலி குறித்த கட்டுரை ஆகியவற்றைக் கவனமாகத் தொகுத்து, மாணவர்களுக்குப் பயனுள்ள முறையில் பாடப்பொருளுடன் சேர்த்து வழங்கிவருகிறோம்.
ஒவ்வொரு பாடத்துக்கும் தேவையான தகவல்கள் மற்றும் கற்றல், கற்பித்தல் பொருட்கள் ‘தி இந்து’ நாளிதழில் மிகவும் தெளிவாக வழங்கப்பட்டுவருவது ஆசிரியர்களாகிய எங்களுக்கும் மாணவர்களுக்கும் மிகவும் உதவியாக உள்ளது. உள்ளபடியே சொல்லப்போனால், ‘தி இந்து’ நாளிதழ் எதிர்காலச் சந்ததியினரின் அறிவுச் சொத்து!
- மு. ஆறுமுகம்,பட்டதாரி ஆசிரியர், சங்ககிரி, சேலம் மாவட்டம்.