மோனோ ரயிலைவிட மெட்ரோ ரயிலே சிறந்தது எனப் பல நிபுணர்கள் பரிந்துரைத்து, நம் நாட்டின் முக்கிய நகரங்களில் அப்பணிகள் வேகமாக நடந்துவருகின்றன.
புதிய ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடுவும் சிறு நகரங்களில்கூட மெட்ரோ ரயில் கொண்டுவர முனைப்புடன் செயலாற்றும் செய்தியையும் வேறு பக்கத்தில் படித்தேன். இந்நிலையில், நாம் ஏற்கெனவே நடந்துகொண்டிருக்கும் மெட்ரோ ரயில் பணிகளைத் துரிதப்படுத்தி, மேலும் புதிய பகுதிகளில் விரிவுபடுத்துவதை விடுத்து, ஜெயலலிதாவின் கனவுத் திட்டம் என்ற ஒரே காரணத்துக்காக மோனோ ரயில் திட்டத்தை நிறைவேற்றியே தீர வேண்டும் என அடம்பிடிப்பது தேவையற்றது.
- வீ.க. செல்வக்குமார்,சென்னை.