‘ப்ளஸ் ஒன் மாணவன் அடித்துக் கொலை' என்ற செய்தி பார்த்து மனம் அதிர்ந்தேன். மாணவர்களுக்கே உரிய இயல்பான அறியாமையும் அப்பாவித்தனமும் இன்று எந்த மாணவனிடமும் காணப்படவில்லை.
மாணவர்களிடம் சாதி, மத உணர்வுகள், போதைப் பழக்கம் போன்றவை நிறைந்து காணப்படுகின்றன. வெளிச் சூழல்கள் கெட்டுக்கிடக்கும் இந்நேரத்தில், ஆசிரியர்களின் பொறுப்பும் பெற்றோர்களின் பொறுப்பும் இன்னமும் கூடுதலாக வேண்டப்படுகிறது. ஆசிரியர்கள் கற்பித்தலோடு தமது கடமை முடிந்தது என்று எண்ணாமல், நல்லன கற்பித்தலை வழக்கமாக்கிக்கொண்டால், அது மாணவர்களை நல்வழிப்படுத்தப் பேருதவியாக அமையும்.
- கே.எஸ். முகமத் ஷூஐப்,காயல்பட்டினம்.