இப்படிக்கு இவர்கள்

காவல்துறையாவது கடமையாவது!

செய்திப்பிரிவு

பெங்களூரில் ஏ.டி.எம். மையத்தில் பெண்ணைக் கடுமையாகத் தாக்கிப் பணத்தையும் செல்போனையும் கொள்ளையடித்துச் சென்ற குற்றவாளி இன்றுவரை கைதுசெய்யப்படவில்லை. இதே கதி ஒரு அரசியல்வாதிக்கோ அல்லது அவர் உறவினருக்கோ ஏற்பட்டால், காவல் துறை எத்தனை வேகமாகச் செயல்பட்டிருக்கும்?

உத்தரப் பிரதேசத்தில், அமைச்சரின் எருமை மாடு தொலைந்தது என்று ஒரு மாவட்ட காவல்துறையே தேடி அலைந்து மாடுகளைக் கண்டுபிடித்தது. இந்தப் பெண், கேவலம் பொதுமக்களில் ஒருவர்தானே! காவல் துறை கண்டுகொள்ளும் என்று நாம் எப்படி எதிர்பார்க்க முடியும்?

கிருஷ்ணா, ‘தி இந்து’ இணையதளம் வழியாக…

SCROLL FOR NEXT