‘தேசம் உங்களை வணங்குகிறது நேரு’ மிக அருமையான தொகுப்பு. உத்தரவாதமான சொகுசு வாழ்க்கைக்கு வாய்ப்பு கிடைக்கப்பெற்றவர்களில் எத்தனை பேருக்கு, தேசம் தலை நிமிர்ந்து நிற்க சிறைக் கொட்டடியில் வாழ்நாளைக் கழித்திடும் நெஞ்சுரம் பிறக்கும்?
பிற்காலத்தில், பாபர் மசூதி விவகாரம் இந்தியாவில் எப்படிப்பட்ட சமூக நல்லிணக்கப் பாதிப்பை உண்டாக்கும், மனித மனம் சிந்தனா சக்தியை இழந்து இயந்திரமாகவே மாறிவிடும் என்பவை குறித்த நேருவின் தொலைநோக்கு பிரமிக்க வைக்கிறது என்றால், குடும்ப ஆட்சியைத் தொடங்க நான் விரும்பவில்லை எனச் சொல்லியிருப்பதோ புல்லரிக்கச் செய்கிறது.
நேரு என்ற ஒருவர் தோன்றாமல் இருந்திருந்தால், அவரைக் கண்டுபிடிக்க வேண்டியிருந்திருக்கும் என்ற, டீன் ஆச்சிசனின் கூற்றை மிக மிகச் சரியென்றே சொல்லலாம்.
- ஜத்துஜஸ்ரா,கொடைக்கானல்.