இப்படிக்கு இவர்கள்

நம்பிக்கை பிறந்தது

செய்திப்பிரிவு

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்குத் தயாராவோர்க்கு ‘தி இந்து’ வினா விடை பகுதியைத் தொடங்கியிருப்பது பெரும் மகிழ்வை ஏற்படுத்துகிறது. முதல் இரண்டு நாட்களுமே அடிப்படிடைச் செய்திகளோடு தொடங்கியிருப்பது அருமை. எந்த விலை உயர்ந்த கைடும், மாதாந்திரப் பொதுஅறிவுப் புத்தகமும் இப்படித் தெளிவான பாடத்திட்டத்தைக் குறிப்பிடவில்லை. டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் பொதுஅறிவுப் பாடப் பகுதி ஆங்கிலத்தில் மட்டுமே உள்ளது. அதை முதலில் தமிழில் தந்தது ‘தி இந்து’ நாளிதழ்தான். பாடத் திட்டம் தமிழில் உள்ளதால் படிக்கும் பாடம்பற்றி ஒரு தெளிவான அறிவும், வேலை கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையும் பிறந்துவிட்டது!

- கோ. தேவி, ஜோலார்பேட்டை.

SCROLL FOR NEXT