இப்படிக்கு இவர்கள்

சிறுவர்கள் மது அருந்தவில்லை

செய்திப்பிரிவு

‘புதுவையில் மது போதைக்கு அடிமையாகும் சிறார்கள்’ என்ற தலைப்பில் ‘தி இந்து’ நாளிதழின் புதுச்சேரி பதிப்பில் கடந்த அக்டோபர் 27-ம் தேதி செய்தி வெளியாகியிருந்தது.

புதுவையில் சிறுவர்கள் மது அருந்துவது தொடர்பான அந்த செய்தியுடன் 2 படங்கள் வெளியாகியிருந்தன. முதலாவது படத்தில் 3 சிறுவர்கள் மதுபானம் வாங்க காத்திருப்பது போலவும், அடுத்த படத்தில் 7 சிறுவர்கள் மது குடிக்கின்ற காட்சியும் இடம்பெற்றிருந்தது. எனினும், முதல் படத்தில் உள்ள 3 சிறுவர்கள் மதுபானம் வாங்குவதற்காக அங்கு காத்திருக்கவில்லை. கடைக்கு முன் நிற்கும் அந்த சிறுவர்கள் பழங்குடி ஆதியன் வகுப்பைச் சேர்ந்தவர்கள். அவர்கள் மூன்றாம் வகுப்பு, ஐந்தாம் வகுப்பு, ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள். அவர்கள் பிச்சையெடுப்பதை வாழ்வாதாரமாகக் கொண்டவர்கள். அவர்கள் சில்லறை வாங்குவதற்காக அந்தக் கடை முன் காத்திருந்தார்களே தவிர, குடிப் பழக்கத்துக்கு அடிமையானவர்கள் அல்ல. சிறுவர்கள் பிச்சையெடுப்பதை முற்றிலும் நிறுத்துவதற்கு எங்கள் சங்கம் பல்வேறு முயற்சிகளை எடுத்துவருகிறது. அந்தச் சிறுவர்களைப் பள்ளிகளில் சேர்ப்பதுடன், அவர்களின் கல்வித் தரம், அவர்களின் வகுப்பறை செயல்பாடுகள் போன்றவற்றையும் தொடர்ந்து கண்காணித்துவருகிறோம்.

- பெ.சுப்ரமணி,தலைவர், பழங்குடி ஆதியன் பாதுகாப்பு சங்கம்.

SCROLL FOR NEXT