இப்படிக்கு இவர்கள்

தமிழுக்கு மணி மகுடம்

செய்திப்பிரிவு

செக். நாட்டு கமில் சுவலபிலின் தமிழ்ப் பற்று போற்றத்தக்கது. அவர் பல்வேறு மொழிகளில் புலமை பெற்றுள்ளதுடன், இன்றைய சமூகம் ஒதுக்கித்தள்ளும் சங்க இலக்கியங்களையும் ஆய்வுசெய்தவர். திராவிட மொழி நூல்களை ஆங்கிலம், ஜெர்மன் மற்றும் செக். மொழிகளிலும் மொழிபெயர்த்துள்ளார்.

மதத்தைத் தாண்டி சிவபெருமான், முருகன் மீது அளவற்ற பற்றுகொண்டு புத்தகங்கள் எழுதியுள்ளார். குறிப்பாக, மகாகவி பாரதியாரின் கவிதைகளைப் புகழ்ந்து ஆங்கிலத்தில் எழுதியுள்ளார். தமிழுக்குத் தன்னால் இயன்ற மணிமகுடத்தைச் சூட்டியுள்ளார் கமில் சுவலபில்.

- கி. ரெங்கராஜன்,சென்னை.

SCROLL FOR NEXT