இப்படிக்கு இவர்கள்

கரைகளை உடைத்த படைப்பு

செய்திப்பிரிவு

பெண்கள் எப்போதும் ஆண்களால் காப்பாற்றப்பட வேண்டியவர்கள், படித்த பெண் திமிர் பிடித்தவள், பெண்கள் ஆண்களைப் போல் உடை அணியக் கூடாது, பெண்களின் தாலி ஆர்.டி.எக்ஸ், அணுகுண்டைவிட வலிமையான ஆயுதம் என்றெல்லாம் தமிழ் சினிமா உருவாக்கிவைத்த பிம்பங்கள் ஏராளம்.

இந்தக் கற்பிதங்களை அடித்து நொறுக்கியதுதான், ‘அவள் அப்படித்தான்’ படத்தின் வெற்றி. கற்பு, கலாச்சாரம் என்ற கற்பிதங்களைத் தாண்டி பாலியலை வெளிப்படையாகப் பேசியது இந்தப் படம். ஆண்களின் வஞ்சத்தைச் சுட்டிக்காட்டியது. இன்னொருபுறம் போலி முற்போக்கின் ஆர்வக் கோளாறுகளையும் மிகைத்தன்மையையும் விமர்சித்தது. “வித்தியாசமா இருக்கிறமாதிரி காட்டிக்கிறது ஒரு ஃபேஷன்” என்ற ஒரு வசனம் போதும்!

- செல்வகுமார் ராமன், ’தி இந்து’ இணையதளத்தில்…

SCROLL FOR NEXT