இப்படிக்கு இவர்கள்

குடிக்கு எதிராக உறுதி எடுப்போம்

செய்திப்பிரிவு

குடியால், குடிப்பவர் மட்டுமின்றி, குடும்பத்தினரும் சுற்றத்தாரும் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். சுப, அசுப நிகழ்ச்சிகள் என்றாலே மதுவும் கட்டாயம் என்ற நிலையில் நம் சமுதாயம் இருப்பது அவலம். போதை அரக்கனின் பசிக்குப் பெண்களும் குழந்தைகளும் பலியாவது நமக்கெல்லாம் மிகப்பெரிய அவமானம். வருங்கால குழந்தைகள் நல்வாழ்வுக்கு நாம் உறுதி ஏற்காவிட்டால், நம் நாட்டின் எதிர்காலமே கேள்விக்குறியாகிவிடும். தீவிரவாதத்தைவிட போதைப் பழக்கம் மோசமானது. நாட்டுக்காக நாம் பெரிதாக ஏதும் செய்ய வேண்டாம்; குறைந்தது நம் வீட்டு விழாக்களிலாவது மதுவை அனுமதிக்க மாட்டோம் என்று தயவுசெய்து உறுதி எடுப்போம்.

- யு. பரணிதரன், ‘தி இந்து’ இணையதளம் வழியாக…

SCROLL FOR NEXT